இந்தியஅரசாங்கத்தின் நிதிஉதவியில் மலையகத்தில் 4000 வீடுகளைநிர்மாணிக்கும் திட்டத்திற்கானஒப்பந்தம் இந்தியஉயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா அவர்களுக்கும்,மலைநாட்டுபுதியகிராமங்கள் உட்கட்டமைப்புவசதிகள் மற்றும் சமுதாயஅபிவிருத்திஅமைச்சர் பழனிதிகாம்பரம் அவர்களுக்கும் இடையில் அமைச்சின் காரியாலயத்தில் கைச்சாத்திடப்பட்டது.
இந்தியஅரசாங்கத்தினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டஐம்பதாயிரம் வீடமைப்புதிட்டத்தில் மலையகபெருந்தோட்டமக்கள் வாழும் மத்தியமற்றும் ஊவாமாகாணங்களுக்கென4000 வீடுகள் ஒதுக்கீடுசெய்யப்பட்டது. ஆனாலும் கடந்தகாலஅரசியல் இழுபறிநிலைகாரணமாகவடகிழக்கில் வீடமைப்புதிட்டம் செயற்படுத்தப்பட்டநிலையிலும் மத்தியமற்றும்ஊவாமாகாணங்களில் நிர்மாணபணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.
100 நாள் வேலைத்திட்டதில் தோட்டஉட்கட்டமைப்புஅபிவிருத்திஅமைச்சராகபழனிதிகாம்பரம் அவர்கள் பொறுப்பேற்றதன் பின் இந்தியஅரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைநடத்தி இந்தவீடமைப்புதிட்டத்தினைதுரிதப்படுத்துமாறுவலியுறுத்திஅதற்கானநடவடிக்கையினைஎடுத்துவந்தார். இதன் பயனாகஇன்று(01.04.2016) இத்திட்டத்தினைநிர்மாணிப்பதற்கானஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்தநிகழ்வில் மலைநாட்டுபுதியகிராமங்கள் உட்கட்டமைப்புவசதிகள் மற்றும் சமுதாயஅபிவிருத்திஅமைச்சர் பழனிதிகாம்பரம் அவர்கள் கருத்துரைக்கும்போது
“இன்றுமலையகவரலாற்றில் முக்கியமானதினமாகும். பெருந்தோட்டமக்கள் வாழும் மத்தியமற்றும் ஊவாமாகாணங்களில் இந்தியஅரசாங்கத்தின் உதவியினூடாக 4000 வீடுகளைநிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கானபுரிந்துணர்வுஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கடந்தகாலங்களில் மலையகஅரசியல் தலைமைகளினால் வினைத்திறனுடனானவேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படாமையினால் தாமதமாகிக் கொண்டிருந்த இந்தவீடமைப்பு திட்டத்தினை துரிதமாக செயற்படுத்தும் வகையில் இன்று இந்தஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த 4000 வீடமைப்புதிட்டத்தினைமுன்னெடுக்க முன்வந்தமைக்காக இந்திய அரசாங்கத்திற்கும் இந்தியஉயர்ஸ்தானிகருக்கும் நன்றி கூறுகின்றேன். எதிர்வரும் 24ம் திகதிமுதல் கட்டமாகபூண்டுலோயாடன்சினன் பகுதியில் அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெறவிருக்கின்றது, குறுகியகாலத்திற்குள் இந்தவீடமைப்புதிட்டத்தினைநிறைவுசெய்வதற்குஎதிர்ப்பார்த்துள்ளதோடுதொடர்ந்தும் இந்தியஅரசாங்கத்துடன் இணைந்து பெருந்தோட்டமக்களுக்கான வீடமைப்பு மற்றும்
உட்கட்டமைப்புவசதிகளைமுன்னெடுக்க எதிர்ப்பார்த்துள்ளோம்”எனதெரிவித்தார்.
இந்தியஅரசாங்கத்தின் ஐம்பதாயிரம் வீடமைப்புதிட்டத்தில் வடகிழக்கில் 45000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளநிலையில் மலையகத்தில் மத்தியமற்றும் ஊவாமாகாணத்திற்கெனஒதுக்கப்பட்ட 4000 வீடமைப்புதிட்டம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இதனை ஆரம்பிப்பதற்கான முதற்கட்டமாக இன்றையதினம் இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது. இந்தவீடமைப்புதிட்டத்திற்குமேலதிகமாகவும் கல்வித்துறையிலும் கலாசாரத்துறையில் பல்வேறுஅபிவிருத்தித்திட்டங்களை இந்தியஅரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது.
மேலும் இந்தவீடமைப்புதிட்டத்தினைதுரிதகதியில் முன்னெடுக்கமுன்னின்றுசெயற்படும் அமைச்சர் திகாம்பரம் அவர்களுக்குபாராட்டுக்களைதெரிவிப்பதாகவும் கருத்துரைத்தார். அதேவேளைமலையகபகுதிகளில் இந்தியஅரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.
இந் நிகழ்வில் தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும் அமைச்சருமானமனோகணேசன்,கூட்டணியின் பிரதித்தலைவரும் கல்வி இராஜாங்கஅமைச்சருமானவே.இராதாகிருஸ்ணன்,பதுளைமாவட்டபாராளுமன்றஉறுப்பனர் வடிவேல் சுரேஸ்,மத்தியமாகாண சபை உறுப்பினர் உதயகுமார்,அமைச்சின் செயலாளர் ரஞ்சினிநடராஜபிள்ளை,பெருந்தோட்டமனிதவளஅபிவிருத்திநிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி,நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எல்லேகலஉள்ளிட்டஅதிகாரிகள் கலந்துகொண்டனர்.


