குணரத்னத்திற்கு அரசியல் உரிமையை பெற்றுக் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்து புஞ்சி பொரளையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன்னதாக முற்போக்கு சோஷலிச கட்சியின் அரசியல் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினால் தீவிர நிலைமை ;ஒன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த எதிர்ப்பு போராட்டகாரர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் உற்பிரவேசிக்க முயன்றுள்ள போது காவற்துறைக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் தீவிர நிலைமை ஒன்று ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த முற்போக்கு சோஷலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரத்னத்துக்கு ஒரு வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது.
கேகாலை நீதவான் பிரசன்ன அல்விஸ் இந்த தீர்ப்பை வழங்கினார். அத்துடன் அவருக்கு 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் குமார் குணரத்னம் கடந்த வருடம் நொவம்பர் மாதம் 5 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.