இளைஞர் ஒருவரினால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான 16 வயது பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டதன் பின்னர் குறித்த பெண் தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ள போது படு காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.
இந்த தற்கொலை முயற்சியினால் உடலில் 40 வீதம் எரிகாயமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எனினும் துஷ்பிரயோகதுக்குள்ளாக்கப்பட்ட பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை இந்த பெண் வீட்டின் தனிமையில் இருக்கும் போது சந்தேக நபரான இளைஞர் துஷ்பிரயோகப்படுத்தியுள்ளார்.
சம்பவத்தின் போது சந்தேக நபரின் நண்பன் வீட்டு வாயிலில் காவலாளியாக இருந்துள்ளார். குறித்த பெண்ணின் சகோதரர் வருவதனை அறிந்த சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாக அறியவந்துள்ளது.
இதனையடுத்து, துஷ்பிரயோகத்துக்குள்ளான பெண் தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக இந்திய பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டது.
சம்பவத்துடன் தொடர்புடைய 17 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.