சாவகச்சேரி மரவன்புலவு பிரதேச வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட தற்கொலை அங்கி ஐந்து வருடங்கள் பழமையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறையினர் இதனை தெரிவித்துள்ளனர்
இது தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் விஷேட காவற்துறை குழு ஒன்று தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனோடு சம்பந்தப்பட்ட நிலையில் கைதானவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்துவதாக பயங்கரவாத தடுப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.