பெரும்பாலானோர்க்கு திருமண தாமதம் ஆவதற்கு பல காரணம் உண்டு. செவ்வாய் தோஷம், ராகு, கேது, தோஷம், தார தோஷம், தார குற்றம், இப்படி பல்வேறு காரணங்களால் திருமண தாமதம் ஆகின்றன.
குறிப்பாக செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தடைப்படும். அதில் குறிப்பாக பெண்களுக்கு செவ்வாய் தோஷம் தான் பெரும்பாலும் பாதிக்கின்றன.
செவ்வாய் தோஷம் என்பது லகனம், சந்திரன், சுக்கிரன், இவைகளுக்கு 2, 4 ,7 ,8 ,12, இந்த ஸ்தானங்களில் இருந்தால் தோஷம் ஆகும். அதிலும் பரிஹார செவ்வாய் என ஒன்று உண்டு, அவை எப்படி என்றால் செவ்வாய்யுடன், சனி, குரு, சூரியன், சந்திரன் போன்ற கிரகங்கள் சேர்ந்தாலோ, பார்த்தாலோ, தோஷ நிவர்த்தி ஆகும். சில முக்கிய லக்னங்களுக்கு தோஷம் கிடையாது.
கடகம், சிம்மம் போன்ற லக்னத்துக்கு தோஷம் இல்லை . அதே போல குறிப்பிட்ட ராசியில் இருந்தால் தோஷம் கிடையாது. சரி இந்த செவ்வாய் தோஷத்திற்கு பரிஹாரம் எவ்வளவோ இருக்கிறது அதில் சிலவற்றை பார்க்கலாம்.
ஹனுமான் சாலிசா, செவ்வாய் காயத்ரி, சுந்தர காண்டம், துர்கா கவசம் , கந்த சஸ்டி கவசம் இது போன்ற நூல்கள் அணு தினமும் படித்து வரலாம். வெள்ளி மோதிரம், பவள மோதிரம் அணிதல், வெள்ளியும், தாமிரமும் கலந்த வளையல்களை அணியலாம்.
செவ்வாய் கிழமைகளில் ஓடுகின்ற நீரில் சர்க்கரை, தேன், சிந்தூரம் இவைகளை கரைக்கவேண்டும். இது போன்ற எண்ணற்ற பரிஹாரங்களால் தோஷ நிவர்த்தி செய்யலாம்