அழகு கலை நடாத்திவரும் ,பெண்ணின் காதலன் என கூறப்படும் நபர் , அப்பெண்ணுடன் கணவன் மனைவி போல் தகாத உறவில் ஈடுபட்டதுடன், மேலும் நண்பர்களுக்கும் அவ்வாறே ஈடுபட அனுமதித்தன் காரணமாக கூட்டு பாலியல் வல்லுறவு நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் நால்வரை கெகிராவை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் களுவாஞ்சிகுடி – சாந்தபுரம் என்ற இடத்தில் அழகு கலை நிலையம் ஒன்றை நடாத்தி வருபவர் என்றும், தேவையான அழகு சாதன பொருட்களை வாங்கும் பொருட்டு ,கொழும்பு செல்ல பஸ் வண்டியில் பயணிக்கும் போ து, அப்பெண்ணுடன் காதல் தொடர்பு வைத்திருந்த 30 வயதான நபர் உட்பட அவரது சகாக்களும் ,பஸ் வண்டியை பின்தொடர்ந்து மோட் டார் சைக்கிளில் பின்தொடர்ந்துள்ளனர்.
இவ்வாறு பயணிக்கும் போது ,அப்பெண்ணின் காதலன் காதலியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ,கனேவல்பொலவில் இறங்கி கொழும்புக்கு மோட்டார் சைக்கிளில் போகலாம் என்றும் பணித்துள்ளார்.
இதன்படி குறிப்பிட்ட அப்பெண்ணும் கனேவல்பொலவில் இறங்கி காதலனை நம்பி, கந்துபொடகம என்ற பிரதேசத்தில் உள்ள மூடி இருந்த கடை அறை ஒன்றுக்கு சென்றுள்ளார் .
அங்கே அவ்விருவரும் தகாத உறவில் ஈடுபட்ட பின் காதலன் இரவு சாப்பாடு வாங்கி வர வெளியே செல்வதாகவும் காதலியை அறையில் இருக்குமாறும், சொல்லிவிட்டு காதலன் வெளியே வந்துள்ளார்.
அப்போது வெளியே ஒளிந்து இருந்த அவரின் நண்பர்கள் மூவரும் பலாத்காரமாக உள்ளே சென்று, அதிகாலை 4.40 வரை அப்பெண்ணை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ,உட்படுத்தியதாக, ,சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மறுநாள் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு ,கல்முனை, அக்கரைபற்று, தாழையடிகுளம் போன்ற இடங்களை வசிப்பிடமாக கொண்ட 30,27,23,20 வயதை உடைய நபர்களை கெகிராவை பொலிசார் கைது செய்து சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.