திருகோணமலை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியொருவர், மாரடைப்பின் காரணமாக புதன்கிழமை (30/03/210)உயிரிழந்துள்ளார் என சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், செட்டியார்புரத்தினைச் சேர்ந்த 52 வயதுடைய அருளப்பு பத்திநாதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மனைவியை எரித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்த இந்நபர், இன்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலைக்குச் கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார்.
சடலம், தற்போது பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சடலத்தை உறவினர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை திருகோணமலை சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.