டுபாய் விமான நிலையம் வழியாக இன்று முதல் எந்த நாட்டிற்கும் பயணம் சென்றாலும் 35 Dirham வரி கட்ட வேண்டும்.
இன்று முதல் துபாய் சர்வதேச விமான நிலையம் வழியாக பயணம் செய்ய உலகிலுள்ள எந்ந ஒரு பயணியும் 35 Dirham தாங்கள் எடுக்கும் பயணச்சீட்டுடன் சேர்ந்து செலுத்த வேண்டும்.
இந்த தொகையினை நீங்கள் பற்றுச்சீட்டை பெறும் கடையின் முகவர் பற்றுச்சீட்டு கட்டணத்துடன் சேர்த்து வசூலிப்பார்.
இது டாலர் மதிப்பில் $ 9.50 எனவும் இலங்கை ரூபாய் மதிப்பில் சுமார் 1395 ரூபாய் இருக்கும்.
இந்த கட்டண வரி ( TAX ) விதிமுறை டுபாய் வரலாற்றில் முதல் முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2015 டுபாய் சர்வதேச விமான நிலையம் வழியாக சுமார் 78 மில்லியன் மக்கள் பயணம் செய்துள்ளனர்.