அனுராதபுரம் – நொச்சியாகம பிரதேசத்தில் பிரபலமான வர்த்தகர்களை தாக்கி பலவந்தமாக பெண்களை பாவித்து ஆபாச புகைப்படம் எடுத்து அச்சுறுத்தி ;கப்பம் பெற்று வந்து கும்பல் ஒன்றை நொச்சியாகம காவற்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
கப்பம் பெற்றுக்கொள்ளும் சம்பவத்துடன் தொடர்புடைய நொச்சியாகம – குசும்புரவை சேர்ந்த 35 வயதுடைய பெண்ணை காவற்துறையினர் கைது செய்துள்ளதுடன் ,பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பி வந்த நபர் என இனங்காணப்பட்டிருந்தும் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை