முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களுக்கு 150 படகுகள் மற்றும் உபகரணங்கள் வழங்குவது குறித்து இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகியுள்ளது.
கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இந்தியா சார்பாக உயர்ஸ்தானிகர் வை.கே சின்ஹாவும் இலங்கை சார்பாக அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.எம் ஆர் அத்திகாரியும் கைச்சாத்திட்டனர்.
இந்த நிகழ்விற்கு, கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர தலைமை தாங்கினார்.
இந்த திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கம் 150 படகுகளை முல்லைத்தீவை சேர்ந்த 300 பயனாளிகளுக்கு வழங்கவுள்ளது. இந்த திட்டத்திற்காக 10 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த படகுகள் கேள்வி பத்திரம் மூலம் விலை மனு கோரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.