அரசாங்கத்துக்குரிய பாதுகாக்கப்பட்ட பகுதியொன்றை அனுமதியின்றி சுத்தப்படுத்தியது மற்றும் மர கொட்டகை ஒன்றை நடாத்தி சென்றது தொடர்பில் சீகிரிய -உடவெலயாகம பிரதேசத்தில் சுற்றுலா விடுதியொன்றின் உரிமையாளர் உள்ளிட்ட நான்கு பேர் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீகிரியா வனத்துறை அலுவலகத்திற்கு இன்று கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.