பெருந்தோட்ட உதவி ஆசிரியர்களுக்கு வாழ்கை செலவு கொடுப்பனவாக 10 ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளது.
இந்த அமைச்சரவை பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த வாழ்க்கை கொடுப்பனவு தற்போது வழங்கப்படும் ஆறாயிரம் ரூபாவிற்கு மேலதிகமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.