வவுனியா செட்டிகுளம் முதலியார்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடாசாலையில் இன்று இட்மபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் பாடசாலைக்கான புதிய கட்டிட திறப்பு விழாவும் இன்று காலை 10.30 மணியளவில் பாடசாலையின் அதிபரின் தலைமையில் இடம்பெற்றது
இந்நிகழ்வில் வடமாகாண அமைச்சர் திரு ப.சத்தியலிங்கம் வடமாகாணசபை உறுப்பினர் திரு இந்திரராசா சிறீரெலோ கட்சியின் செயளாலர் நாயகம் திரு ப.உதயராசா ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டனர் மற்றும் கௌரவ விருந்தினர்களாக செட்டிகுளம் கோட்ட கல்வி அதிகாரி மற்றும் வலய கல்வி பணிப்பாளர் அவர்களும் சமய தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்
மேலும் இந்நிகழ்வில் மாணவர்களின் பல கலாச்சார நடனங்கள் சிறப்பு நிகழ்வுகள் என்பன இடம்பெற்றதுடன் புலமை பரிசில் பரீட்சையில் மாணவர்கள் சித்தியடைய காரணமாயிருந்த ஆசிரியர் திரு ரஞ்சித் கண்ணா அவர்ளுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் கௌரவிப்பு நிகழ்வொன்றும் இடம்பெற்றது
அத்துடன் நிகழ்வின் இறுதியில் பாடசாலையின் அபிவிருத்திக்காக சிறீரெலோ கட்சியின் செயளாலர் நாயகம் திரு ப.உதயராசா அவர்கள் 20000 ரூபா பணத்தினை பாடசாலை சமுகத்திற்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
இறுதி நிகழ்வாக விருந்தினர்கள் மற்றும் மாணவர்களுக்கும் மதிய போசனம் வழங்கியதுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன