பாராளுமன்றம் சுற்றிவளைக்கப்படும் அபாயம்!
வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட தண்டப் பணத்துக்கு விரைவில் தீர்வொன்றை முன்வைக்கத் தவறின் முச்சக்கர வண்டி ஊழியர்கள் அனைவரையும் அழைத்து பாராளுமன்ற கட்டடத்தை சுற்றிவளைப்போம் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுய தொழில் முச்சக்கரவண்டி ஊழியர்களின் தேசிய சம்மேளனம் இதனை தெரிவித்துள்ளது.
அச்சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது,
இந்த தண்டப் பணம் அதிகமானது. இதற்கு எமது எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அமைச்சருடன் நாம் பேச்சுவார்த்தை நடாத்த எதிர்பார்த்துள்ளோம்.
அதில் தீர்வு கிடைக்காது போனால் சகல முச்சக்கரவண்டி சங்கங்களையும் சேர்த்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.