காந்தி தேசத்துக்கு அஹிம்சையின் உச்சத்தைக் காட்டியவன் தியாக தீபம் திலீபன்.
இன்று பௌத்த தேசத்துக்கு பொறுமையின் உச்சத்தை காட்டியிருக்கிறார் கிழக்கு மாகாண, பட்டிப்பளை பிரதேச கிராம சேவகர்.
அந்த கிராமசேவகர் காத்த அமைதியும் பொறுமையும் கூட ஒரு போராட்ட வடிவம் என்றுதான் நான் சொல்லுவேன். இன்னும் சொல்லப் போனால் வடக்கில் எழுந்த “எழுக தமிழ்” கோஷங்களை விடவும் பலமடங்கு சக்தி வாய்ந்தது இந்த கிராமசேவகரின் அமைதியும், உறுதியும்.
அதுக்காக….
அந்த வீடியோவை முகநூலில் நாம் பகிர்வது தமிழ் இனவெறியை காட்டுகிறது என்று சொல்லும் அளவுக்கு அஹிம்சையினதும், பொறுமையினதும் அதி உச்ச நிலைக்கு எம்மவர் சிலர் போவது கொஞ்சமும் சரியல்ல.
அமைதி காக்கப்பட வேண்டிய இடங்களில் அமைதியாகவும் பேசவேண்டிய இடங்களில் பேசுவதுமே நேர்மை.
சிங்களத்தை பொறுத்தவரையில் பௌத்தம் என்பது அவர்களுக்கான ஆன்மீக மார்க்கம் அல்ல.
அது அவர்களின் மேலாதிக்கத்துக்கான ஒரு சித்தாந்தம்.
அதுவே மகாவம்சம். அவர்கள் படிப்பது “தம்மபதம்” அல்ல.
அவர்கள் நம்புவது பத்தினி தெய்வத்தையும் இன்ன பிற பண்டைய திராவிட தெய்வ வழிபாடுகளையுமே.
இந்நிலையில் ஜனாதிபதி அவர்கள் ஐ.நா இல் “இலங்கை ஒரு பௌத்த நாடு” என வெளிப்படையாகச் சொல்வதன் மூலம்…..
மகாவம்சமே எமது புனித நூல், எமது சித்தாந்தம், எமது வழிகாட்டி, எமது அடிப்படை யாப்பு என்னும் செய்தியை சொல்லாமல் சொல்லிவிடுகிறார்.
அதாவது,
ஒருபுறம் மகாவம்ச மனோபாவத்தை வளர்த்தபடி, மகாவம்சம் கூறும் நோக்கங்களை நோக்கி நகர்ந்தபடி….
மறுபுறம் நல்லிணக்கம் பற்றியும் பல்லின பண்பாடு, கலாச்சாரம் பற்றியும் எமக்கு ஆசை வார்த்தை காட்டி கொண்டிருக்கிறார்கள்.
இது மொட்டைந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் விசயம்.
மகாவம்சத்தை வழிகாட்டியாக கொண்ட இனமும் சரி அரசும் சரி எப்படி மற்ற இனங்களை மதிக்க முடியும்?
ஆயினும் நமது மக்கள் சிலர் அதை நம்புகின்றனர் 😤
அந்த சிலர் எம் எல்லோரையும் அதை நம்பும்படி ஓதிக் கொண்டேயிருக்கின்றனர். 😷
அதை நமது மக்கள் நம்பும் படியாக பல நாடகங்களும் மேடையேற்றப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. அவர்கள் கை ஓங்கியே உள்ளது.
எம்மைச் சுற்றி ஒரு பெரும் மோசடி வெற்றிகரமாக மெல்ல மெல்ல நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆனாலும்….
“தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்கிற தந்தை செல்வாவின் கூற்றுக்கு அமைய….
பேரினவாதம் ஏதாவது ஒரு பக்கத்தால் தன் சுய முகத்தை எமக்கு காட்டிக் கொடுக்கும்படி சம்பவங்கள் நடந்து விடுகின்றன.
இன்றைய நல்லாட்சித் தந்திர சூழலில் இந்த ஆமத்துரு தன்னை அப்பட்டமாக வெளிக்காட்டிக் கொண்டது ஒரு தெய்வாதீனமான செயலே!
ஏமாந்து கொண்டிருக்கும் எம் மக்களுக்கு சிங்கள பௌத்தத்தின் உண்மை முகத்தைக் காட்ட இந்த வீடியோவை பயன்படுத்துவது எவ்வாறு இனவெறி ஆகும்?
மேலும்,
சிங்கள பேரினவாத மனோபாவத்தையும், அந்த சிங்கள பேரினவாதம் சார்ந்து தமிழர்களின் எதிர்ப்புணர்வு அல்லது அச்சம் அல்லது வெறுப்பையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்க முடியாது.
மேலும்,
,
இந்த வெறி பிடித்த ஆமத்துரு ஒரு தனி மனிதனல்ல. அவன் முழு சிங்கள பௌத்தத்தினதும் பிரதிநிதி, பிரதிபலிப்பு என்பதையும் புரிந்து கொள்வோம்.
இந்த ஆமத்துருவை கொண்டு போய் சிறையில போடுவதால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது என்பதையும் அறிவோமாகா.
ஏனெனில் தவறு தனியாட்களில் அல்ல, அடிப்படை சிஸ்டத்தில்!