இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாத் தாள்களை செல்லுபடியற்ற நாணயத்தாள்களாக இந்தியா அறிவித்ததும், சிறீலங்காவில் செயற்படும் சில நாணய மாற்று முகவர்கள் அதனைக் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்து கொள்ளை இலாபம் ஈட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறீலங்காவிலிருந்து பெருமளவானோர் அடிக்கடி இந்தியாவுக்குப் பயணம் செய்வதால் அவர்களிடம் இந்தியத் தாள்கள் இருப்பது வழமை.
அடுத்த பயணத்தின்போது பயன்படுத்தலாம் என்று கருதி 500, 1000 ரூபாத் தாள்களை அவர்கள் அதிகமாக வைத்திருப்பதும் வழமை.
குறித்த நாணயத்தாள்களை இந்தியாவில் மாற்றுவதற்கு டிசம்பர் 30 வரையுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்திய நாணயத்தாள்களை சிறீலங்காவில் மாற்றுவதற்கு பல நாணயமாற்று நிறுவனங்கள் மறுத்துள்ள நிலையில், ஒரு சில நிறுவனங்கள் மாத்திரம் மிகக் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்து பகல்கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.