வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர்கள் சங்கம் இரத்ததான நிகழ்வு
வவுனியா பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்ட இரத்தப்பற்றாக்குறையினை அடுத்து வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாய பழைய மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வு இன்று 13.11.2016 காலை 9மணிக்கு பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பழைய மாணவர்கள் சங்கத்தலைவரும் அதிபருமான திரு. த. அமிர்தலிங்கம். பழைய மாணவர் சங்க செயலாளர் எஸ். சுஜன், பொருளாலர் ஆ. அம்பிகாபகன் மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.