யாழ்ப்பாணத்தில் மனைவியின் தாயுடன் அப்பா கள்ளத்தொடர்பு – மகன் தற்கொலை முயற்சி
62 வயதான ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் திருவிளையாட்டு மகனைத் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு துாண்டியுள்ளது.
மானிப்பாய் பிரதேசத்தில் ஓய்வு பெற்ற வங்கி உத்தியோகத்தரான 62 வயதான நபர் தனது மருமகளின் (மகனின் மனைவி) தாயாரான 49 வயது விதவைப் பெண்ணுடன் (கமலா) குடும்பம் நடாத்த முற்பட்டதால் மகன் நஞ்சருந்தி தற்கொலை செய்ய முற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தனது மனைவியையும் கூட்டிக் கொண்டு அயல் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு ஜமசங்காரம் பார்த்துக் கொண்டிருந்த மகனுக்கு அவசர தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. உடனடியாக மகன் தனது மனைவியுடன் வீட்டுக்குச் சென்ற போது அங்கு தனது தந்தையையும் மனைவியி்ன் தாயாரையும் ஒரு அறைக்குள் நிர்வாணமாக நிலையில் மூடிவிட்டு அயலவர்களையும் தன்னுடன் கூட்டிக் வைத்திருந்தார் மனைவியின் தாயாரின் சகோதரி.
குறித்த சகோதரிக்கும் மனைவியின் தாயாருக்குமிடையில் நீண்டகாலமாக வேலிச்சண்டையும் சொத்துப் பிரச்சனை இருந்ததாகவும் இது தொடர்பாக நீதிமன்றில் வழக்கும் நடைபெறுவதாகவும் தெரியவருகின்றது. இவர்கள் இருவரின் கள்ளக்காதல் தொடர்பாக அறிந்திருந்த சகோதரி வீட்டுக்குள் புகுந்து கையும் களவுமாக இவர்கள் இருவரையும் பிடித்து வைத்திருந்துள்ளார்.
இதனையடுத்து இவர்கள் இருவரையும் அலங்கோலமாகப் பார்த்த மகன் வீட்டை விட்டு வெளியேறி கிருமிநாசினி அருந்திய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
நன்றி-நியு ஜப்னா