யாழ். கரவெட்டிப் பகுதியில் உள்ள பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீடு பட்டப்பகலில் உடைக்கப்பட்டு அங்கிருந்த 4 1/2 பவுண் தங்கநகை திருடப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
விக்கினேஸ்வரா வீதி, சண்டிக்குளம் பகுதியில் உள்ள வீட்டினை நேற்று முன்தினம் காலை பூட்டி விட்டு சென்றவர்கள் முற்பகல் 10.00 மணியளவில் வீட்டிற்கு வந்தபோது வீடு உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளமை தெரியவந்தது.
வீட்டின் மதிலால் உட்புகுந்த திருடர்கள் கதவினை உடைத்து திறந்து உட்பகுதி அறையின் திறப்பு வைக்கப்படும் இடத்தில் திறப்பினை எடுத்து உள் கதவினைத் திறந்து நகையினை திருடியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 1/2 பவுண் தங்க நகை திருடப்பட்டதாக முறையிடப்பட்ட போதும் மேலும் சில பொருட்களும் களவாடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.