வன்னியில் கடந்த 25 ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை இடம்பெற்ற காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் ஆயிரத்து 49 பேர் சாட்சியமளித்துள்ளனர்.
இதன்போது, 306 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளதாகவும் ஆணையாளர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
வவுனியா பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்கழு விசாரணை நிறைவடைந்த பின்னரே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த வாரத்தில் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் விசாரணைகள் இடம்பெற்றன.
இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 25 ஆம் திகதி 290 பேருக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் 141 பேர் சாட்சியமளித்தனர். 23 பேர் புதிதாக விண்ணப்பித்திருந்தனர்.
26 ஆம் திகதி முல்லைத்தீவில் 290 பேருக்கு அழைப்பு விடுவிக்கப்பட்ட நிலையில் 120 பேர் சாட்சியமளித்ததுடன், 18 பேர் புதிதாக விண்ணப்பித்திருந்தனர்.
மறுதினம் 294 பேருக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பிய போதும் 196 பேர் சாட்சியமளித்தனர்.அதேவேளை, 69 பேர் புதிதாக விண்ணப்பித்தனர்.
மன்னாரில் கடந்த 28 ஆம் திகதி நடைபெற்ற ஆணைக்குழு விசாரணையின் போது 257 பேருக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்ட போதும் 170 பேர் வருகை தந்ததுடன், 41 புதிய விண்ணப்பங்களும் கிடைத்தன.
வவுனியாவில் கடந்த இரு தினங்களாக விசாரணைகள் நடைபெற்ற நிலையில் செவ்வாய்கிழமை 311 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதன்படி. 238 பேர் சாட்சியமளித்ததுடன் 79 பேர் புதிதாக விண்ணப்பித்திருந்தனர். இறுதிநாளான நேற்று 218 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பிய நிலையில் 183 பேர் சாட்சியமளித்தனர்