உள்ளுராட்சி சபை தேர்தலை நடாத்துமாறு கோரி இரத்தினபுரி மாவட்டத்தில் பொது மக்களிடமிருந்து 10 இலட்சம் கையொப்பங்களை பெறும் நடவடிக்கை நாளை ஆரம்பமாகவுள்ளது.
இரத்தினபுரி மணிக்கூட்டு கோபுரத்தின் அருகில் இந்த நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
உள்ளுராட்சி சபைகள் கலைக்கப்பட்டு நாளையுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. இந்தநிலையில் இன்னும் அதற்கான தேர்தல் நடாத்தப்படவில்லை. இது பொது மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும். எனவே இதற்கு எதிராக பொது மக்கள் வீதியில் இறங்கிப்போராடவும் ஆயத்தமாக உள்ளார்கள்.
ல்லாட்சி அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருகின்றது. பொதுமக்கள் இதனை நன்கு உணர்ந்து விட்டார்கள். எனவே உள்ளுராட்சிசபைத்தேர்தல் விடயத்தில் இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது என்று ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.