ஆரம்பிக்கப்பட்டு சில நாட்களில் அதிகமானவாசகர்களை கவர்ந்த Tnnlk.com(தமிழ் தேசிய செய்திகள்) இணையத்தின் வளர்ச்சி வேகம் நிலைத்திட வாழ்த்துக்கள். என வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ. தியாகராஜா அவர்கள் எமக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் .
அவ் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிடுகையில் Tnnlk.com இன் பணிப்பாளர் ,ஆசிரியர், உள்ளிட்ட பணியாளர்களின் அயராத உழைப்பினால் குறுகிய காலத்தில் பல்லாயிரக்கணக்கான வாசகர்களை தொட்டிருக்கும் இவ் இணையத்தளம் சமுக பொறுப்புடன் கூடியதும் நடுநிலையானதுமான செய்திகளை தொடர்ந்தும் பிரசுரித்து மக்களின் அபிமானத்தைப் பெற்று மென்மேலும் வளர்ச்சிபெற வாழ்த்துகின்றேன். என குறிப்பிடப்பட்டுள்ளது.