மேற்கு வங்காளத்தில் உரிமைக்காக போராடும் பாலியல் தொழிலாளர்கள், அரசியல் கட்சிகள் தங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் பாலியல் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கையை முன்வைத்து உள்ளனர். நாட்டில் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் வசிக்கும் மேற்கு வங்காளத்தில் அரசியல் கட்சிகள் தங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் நிறைவேற்றவில்லை என்றும் இந்த முறை நிலையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறிஉள்ளனர். துர்பார் மகிள சமன்வயா கமிட்டியானது மேற்கு வங்காளத்தில் சுமார் 1,50,000 பாலியல் தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்டு உள்ளது.
கமிட்டியானது நாங்கள் அரசியல் கட்சிகளால் ஏமாற்றுப்பட்டு விட்டதாக உணர்வதாகவும், எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற அரசியல் கட்சிகள் அவர்களுடைய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கூறிஉள்ளது.
“எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ, அப்போதெல்லாம் அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிக்கின்றன. நாங்களும் பல்வேறு ஆண்டுகளாக எங்களுடைய கோரிக்கையை முன்வைக்கிறோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை,” என்று அனைத்து இந்திய நெட்வோர்க் ஆப் பாலியல் தொழிலாளர்களின் தலைவர், துர்பார் மகிள சமன்வயா கமிட்டியை சேர்ந்த பாரதி தேவ் கூறிஉள்ளார். ஏ.ஐ.என்.எஸ்.டபிள்யூ. கமிட்டியின் கீழ் உள்ள விரக்தியடைந்த பாலியல் தொழிலாளர்கள் அனைவரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்த ’நோட்டோ’விற்கு வாக்களிக்க முடிவு செய்து உள்ளனர் என்றும் தேவ் கூறிஉள்ளார்.
தேசம் முழுவதும் சுமார் 16 மாநிலங்களில் ஏ.ஐ.என்.எஸ்.டபிள்யூ. தொழிலாளர்கள் பரவிஉள்ளனர். ”நாங்கள் அரசியல் கட்சியினருக்கு எங்களுடைய கோரிக்கையை வலியுறுத்திய கடிதங்களை அனுப்புவோம், எங்களுடைய மற்றும் எங்களுடைய குடும்பத்தின் பிரச்சனைகளை எழுப்புவோம்,” என்று கூறிஉள்ளார். பாலியல் தொழிலாளர்களுக்கு ஓய்வு ஊதியம் கொடுக்கப்பட வேண்டும், விபசார தடுப்பு சட்டத்தை நீக்குதல், விபசார தொழிலை சட்டபூர்வமாக்குதல்,
பாலியல் தொழிலாளர்களை தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் இணைத்தல் மற்றும் மைனர்கள் இந்த தொழிலுக்கு தள்ளப்படுவதை தடுக்க சுய கட்டுப்பாட்டு குழுவை அமைக்க வேண்டும் ஆகியவற்றிற்காக கமிட்டி ஆண்டுகளாக போராடிவருகிறது என்று தேவ் கூறிஉள்ளார்.
ஆனால் எங்களுடைய கோரிக்கையானது மத்திய மற்றும் மாநில அரசுகளால் நிறைவேற்றப்படவில்லை. முறையான வாழ்கையை வாழ பாலியல் தொழிலாளர்களுக்கு அடிப்படை உரிமை வேண்டியது உள்ளது என்று மகேஷ்வேதா முகர்ஜி கூறிஉள்ளார்.