ஒரு கிலோ உப்பை கொள்வனவு செய்ய 5 கிலோகிராம் நெல்லை விற்பனை செய்ய வேண்டிய நிலையிலேயே நாட்டின் தற்போதைய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் இன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டின் முதுகெழும்பாக காணப்படும் விவசாயத்துறை முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து செல்கின்றது. அது இந்த வாரத்திற்குள் இன்னும் அதிகமான வீழ்ச்சி போக்கை காட்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.