வரும் ஏப்ரல் 3ஆம் நாள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
யாழ்.நகரில் உள்ள இரண்டு விடுதிகளையும், வவுனியாவில் வீ்டமைப்புத் தொகுதியையும் அவர் திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சாவகச்சேரிப் பகுதியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, யாழ்ப்பாணப் பயணத்தை ரத்துச் செய்யுமாறு படைத்தரப்பினால், சிறிலங்கா அதிபர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அதிபரின் பயணத்துக்கான ஏற்பாடுகளை கவனிக்க யாழ்ப்பாணம் சென்றிருந்த, அதிபர் பாதுகாப்புப் பிரிவினர், திருப்பி அழைக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது,