உலகக்கிண்ண இருபதுக்கு இருபது போட்டியின் முதல் சுற்றில் இருந்து அகற்றப்பட்ட இலங்கை அணி நேற்று இரவு தாயகம் திரும்பியது. அவர்களை வரவேற்பதற்காக இலங்கை கிரிக்கட் சபையின் அதிகாரிகள் சிலர் விமான நிலையம் வந்திருந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து , ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை அணித்தலைவர் ஏன்ஞலோ மெத்திவ்ஸ் தெரிவித்தது, ஒரே அணியாக விளையாட முடியாமல் போனதே போட்டியின் தோல்விக்கான காரணம் என தெரிவித்திருந்தார்.