பாதுகாப்பு சேவைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள 450 CC எஞ்சின் திறன் கொண்ட உந்துருளிகளை பொதுமக்கள் பாவனைக்கும் வழங்குவது தொடரப்பில் சட்டம் இயற்றுவதற்கு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உள்ள கேள்விகளை பரிசீலித்து இந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜெனரல் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
அனேகமாக , எதிர்வரும் இரு வாரங்களுக்குள் குறித்த சட்டம் தொடர்பான நடவடிக்கைகள் நிறைவடையும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.