மதவாச்சி வகமல்கொல்லேவ பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த 06 வயது சிறுமியின் சடலம் நேற்று இனம் தெரியாத நபர்களினால் இரகசியமான முறையில் தோண்டப்பட்டுள்ளதாக மதவாச்சி காவற்துறை தெரிவித்தது.
குறித்த சிறுமி, கடந்த வெள்ளிக்கிழமை வகமல்கொல்லேவ பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்து கொண்டிருக்கும் போது விபத்துக்குள்ளானதுடன் தாய் மற்றும் மேலும் இரண்டு பெண்கள் காயமடைந்தனர்.