தங்கொட்டுவ கொடெல்ல பிரதேசத்தில் 10 வயது சிறுவர் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர் நீரை சூடாக்க முயற்சித்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.