மாத்தளை மருத்துவமனை வளாகத்தில் இருந்து மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்ட சம்பவம் பற்றி மாத்தளை நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பாக ஜே.வி.பி. மேன்முறை செய்யவுள்ளது.
அதற்கு முன்னதாக தாம் சட்டமா அதிபரை சந்திக்கவுள்ளதாக ஜே.வி.பியின் பொது செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அதற்கு முன்னதாக தாம் சட்டமா அதிபரை சந்திக்கவுள்ளதாக ஜே.வி.பியின் பொது செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த 1950 ஆம் ஆண்டுக்கு முன்னர் உயிரிழந்தவர்களின் உடல் எச்சங்களாக இருக்கும் என மாத்தளை நீதவான் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அமெரிக்க புளோரிடாவை மையமாகக் கொண்ட தொல்பொருளியல் சார்ந்த ஆய்வகத்தின் காலவரிசைப் படியான அறிக்கைக்கு அமைய நீதிமன்றம் இந்த விடயத்தை கவனத்திக்கு எடுத்திருந்தது.
எனினும், மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக ஜே.வி.பியின் பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.