மேல் மற்றும் தென் மாகாணத்தில் மேற்கொள்ள தீர்மானித்துள்ள நோயாளர் காவு வண்டி சேவைகளின் பொருட்டு, இலங்கையர்கள் மட்டுமே இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மகிபால இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சேவையில் பரீட்சார்த்த நடவடிக்கைகளின் போது மாத்திரம் இந்தியர்கள் மூவர் அல்லது நான்கு பேரின் உதவி பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.