யாழ்ப்பாணம் – சங்கிலியன் தோப்பு பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த காணி உரிமையாளர் நீர்பாசன பணிகளை மேற்கொண்டித்த போதே இந்த வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நிலத்தின் கீழ் மறைத்து வைத்திருந்த நிலையில் இவை விஷேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட வெடிமருந்துகள் குறித்து காவல்துறையினர் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.