வடமாகாணத்தில் அதிகரித்துள்ள போதை பொருள் பாவனையை கட்டுபடுத்துவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியமென வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஆளுநரிடம் ஊடகவியளாலர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் முகமாகவே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தூரம் குறைவாக இருக்கின்ற காரணத்தினாலேயே போதை பொருள் கடத்தல்கள் இடம்பெறுகின்றன.
இந்தநிலையில், போதை பொருள் கடத்தலை தடுப்பதற்கு காவல்துறையினர் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.
எனினும், போதை பொருள் பாவனையை கட்டுபடுத்துவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியமெனவும் வடமாகாண ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.