இந்த வருட இறுதிக்குள் தமிழ் நாட்டில் இருந்து 30 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீள்குடியேற்றத்துறை அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இருந்து நாடு திரும்புகின்ற ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் அகதிகளின் மீள்குடியேற்றம் குறித்த விசேட கொள்கை ஒன்று அமுலாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் ஊடாக அகதிகளின் திரும்பலை மேலும் அதிகரிக்க முடியும் என்று மீள்குடியேற்றத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.