பொலன்னறுவை – உல்கடுஹெலகம பிரதேசத்தில் 23 வயதுடைய இராணுவ வீரர் ஒருவர் இன்று ஏற்பட்ட உந்துருளி விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ட்ரெக்டர் வாகனம் ஒன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் தனக்கு பிறந்த முதற் குழந்தையையும் தனது மனைவியையும் பார்த்து நலன் விசாரிப்பதற்காக பொலன்னறுவை மருத்துவமனைக்கு சென்று ,திரும்பிக்கொண்டிருந்த போதே குறித்த விபத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
ஹிங்குரக்கொடை – உணகலவெஹெர பிரதேசத்தின் ஜயவிக்ரம சந்தியில் குறித்த உந்துருளி ட்ரெக்டருடன் மோதியுள்ள நிலையில் , குறித்த இராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.