நீதிமன்றத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளது என கூறி சட்டத்தரணி நாகஹாநந்த கொடிதுவக்குவினால் உயர் நீதிமன்றத்தில் இன்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய தலைமை நீதிபதி கே.ஸ்ரீபவன், முன்னாள் பிரதம நீதியரசர்களான ஷிராணி பண்டாரநாயக்க, மொஹான் பீரிஸ் மற்றும் சரத் என் சில்வா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட 14 பேர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.