வெள்ளவத்தை 42 வது ஒழுங்கை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி சென்ற விபச்சார விடுதியொன்று காவற்துறையினரால் நேற்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன் போது தாய்லாந்து நாட்டை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 7 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அங்கு முகாமையாளராக செயற்பட்டு வந்த நபரொருவரும் வெள்ளவத்தை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நாட்டை சேர்ந்த சந்தேக நபர்கள், கண்டி, வாரியபொல, பாதுக்கை, எம்பிலிபிட்டிய, மற்றும் பெந்தொட்ட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி நேற்று இரவு காவற்துறையினரால் இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.