பாகிஸ்தான் லாகூர் நகரில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் பாரிய அளவில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மூன்று நாள் துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
லாகூரில் உள்ள பூங்காவில் இடம்பெற்ற கிறிஸ்தவ உயிர்த்த ஞாயிறு மத நிகழ்வின் போது இடம்பெற்ற இந்த தாக்குதலின் போது, 29 சிறார்கள் உட்பட 70 இற்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.
இதுதவிர குறைந்தது 300 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களின் பலரது நிலை கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷெரீவ், காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவ மனைகளுக்கு நேரடியாக சென்றள்ளார். அதன் பின்னர் அவர் உயர் மட்ட இராணுவ அதிகாரிகளுடன் எதிர்கால பாதுகாப்பு திட்டங்கள் குறித்து உரையாடியுள்ளார்.