மேஷம் -:அலைச்சல் அதிகரிக்கும். எளிதில் முடிய வேண்டிய காரியத்திற்கும் கூடுதலாக முயற்சிக்க வேண்டியிருக்கும். குடும்பத்தினர் குறித்த ஆதங்கம் இருக்கும். எதிர்பாராத செலவுகள் சேமிப்பை கரைக்கும். சொன்ன வார்த்தையை காப்பாற்ற போராட்டம் இருக்கும். சூடான பொருட்களை கையாளும்போது அதிக கவனம் தேவை. செல்போன், ரிமோட் முதலான எலக்ட்ரானிக் பொருட்களில் பழுது உண்டாகலாம். உறவினர்களால் கலகம் தோன்றும். வண்டி, வாகனங்களில் பயணிக்கும்போது அதிக எச்சரிக்கை அவசியம். பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்காக திட்டமிட்டிருந்த பணிகள் தள்ளிப்போகும். மருத்துவ செலவு ஏற்படும். வாழ்க்கைத்துணையின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொள்ள இயலாது தடுமாறுவீர்கள். வேலைக்குச் செல்வோர் அலுவலகத்தில் மேலதிகாரியோடு கருத்து வேறுபாடு கொள்ள நேரிடும். கலைத்துறையினருக்கு திருப்புமுனை ஏற்படும். இரவில் கனவுத்தொல்லையால் நிம்மதியான உறக்கம் கெடும். அலைச்சல் தரும் வாரம் இது. வழிபாடு: கந்தர் அனுபூதி படித்து வரவும்.
ரிஷபம்-: எதிலும் சிறப்பான செயல்பாடு இருக்கும். நினைத்த காரியத்தை உடனுக்குடன் நடத்தி முடிக்கும் திறன் கூடும். நண்பர்களிடம் கூடுதல் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் சலசலப்பு தோன்றி மறையும். சேமிப்பு உயர்வடையும். கடன் விவகாரங்கள் முடிவிற்கு வரும். நெடுநாட்களாக நிலுவையில் உள்ள தொகை வசூலாகும். பேச்சில் நகைச்சுவை வெளிப்படும். முன் பின் தெரியாதவருக்கு உதவப்போய் சிரமத்திற்கு ஆளாவீர்கள். உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் வரும். பிள்ளைகளின் செயல்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதோடு உறவினர்கள் மத்தியில் உங்களை தலைநிமிர செய்யும். வயிற்று கோளாறுகளால் உடல்நிலையில் சிரமம் தோன்றும். தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். வேலை பார்ப்போருக்கு அலுவலக பிரச்னைகளை எளிதில் சமாளிக்கும் திறன் கூடும். மாணவர்கள் மொழிப்பாடங்களில் முன்னேற்றம் காண்பர். கலைத்துறையினர் சிறப்பான வளர்ச்சி காண்பர். நற்பலன்களைத் தரும் வாரம் இது. வழிபாடு: வெள்ளியன்று காமதேனு பூஜை செய்து வணங்கவும்.
மிதுனம்-: வாழ்க்கை தரத்தில் முன்னேற்றம் உண்டு. அடுத்தவர்களுக்காக அதிகம் உழைப்பீர்கள். குடும்பத்தினர் தங்கள் தேவைகளுக்கு உங்களைப் பெரிதும் சார்ந்திருப்பர். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். கடன்சுமைகள் குறையும். வீட்டில் மாற்றங்கள் செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். அண்டை வீட்டார் தங்கள் குடும்பப் பிரச்னைக்கு ஆலோசனை கேட்டு உங்களை நாடுவர். பிள்ளைகளின் வேகமான செயல்களைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். வாழ்க்கைத்துணையின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். பொருட்கள் வாங்கும் போது எச்சரிக்கை அவசியம். முதியவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி கொள்வீர்கள். பணிபுரிவோர் அலுவலகத்தில் பதவி உயர்விற்கான வாய்ப்பு பெறுவர். சுயதொழில் செய்வோருக்கு தனலாபம் கிட்டும். கலைத்துறையினர் புதிய வாய்ப்பு பெறுவர். மாணவர்கள் கூடுதல் பயிற்சி மூலம் தகுதியை வளர்த்துக்கொள்வர். முன்னேற்றம் தரும் வாரம் இது.
வழிபாடு: சோமஸ்கந்தரை வழிபட்டு வர நன்மை உண்டாகும்.
கடகம் -:எடுத்த காரியத்தை நடத்தி முடிக்கும் வரை அதே சிந்தனையுடன் இருப்பீர்கள். பணிச்சுமை கூடும். அடுத்தவர்களின் பணிகளையும் இழுத்துப் போட்டு செய்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பப் பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் தேவை. கடன்பிரச்னைகளை சமாளிப்பதில் சேமிப்பு குறையும். சொன்னபடி நடப்பதில் அதிக கவனம் கொள்வீர்கள். உடன்பிறந்தோரிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிட்டும். அண்டை அயலார் தங்கள் குடும்பப் பிரச்னைகளுக்கு ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவர். பிரயாணத்தின்போது பொருளிழப்பு உண்டாகும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கவுரவத்தை உயர்த்தும். முதுகுவலி பிரச்னைகள் உடல்நிலையில் சிரமம் தரும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் புரிந்துகொண்டு உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். வேலை பார்ப்போர் அலுவலக பணி தொடர்பாக அலைச்சல் கூடும். மாணவர்கள் மனப்பாட திறன் மூலம் தேர்வினை சிறப்பாக எதிர்கொள்வர். கலைத்துறையினர் முயற்சியில் தடைகள் இருக்கும். கடமை உணர்வால் ஓய்வின்றி செயல்படும் வாரம் இது.
வழிபாடு: குருமகான்களை வழிபட்டு வரவும்.
சிம்மம் – : எடுத்த பணியை முடிப்பதற்குள் பல வழிகளிலும் தடைகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள், மிகவும் நம்பிக்கைக்குரிய நபர் ஒருவர் உங்களுக்கு எதிராக செயல்படுவர். எதிர்பாராத செலவுகள் சேமிப்பை கரைக்கும். அண்டை அயலாரோடு வீண் மனஸ்தாபம் தோன்றும். செல்போன், கம்ப்யூட்டர் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் உண்டாகும் பழுது உங்கள் பணிகளை பாதிக்கும். உறவினர்களின் கலகத்தால் அவப்பெயர் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை மனதை ஆக்கிரமிக்கும். நுரையீரல், சுவாசக்குழாய் பகுதிகளில் உண்டாகும் அலர்ஜியால் சிரமம் தோன்றும். வாழ்க்கைத்துணையின் மனநிலையைப் புரிந்து கொள்வதில் தடுமாற்றம் உண்டாகும். குறைந்த விலையுள்ள பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க நேரிடும். குடும்பப் பெரியவர்களோடு மனஸ்தாபம் உருவாகும். பணிக்குச் செல்வோருக்கு அலுவலகத்தில் மேலதிகாரியோடு மோதல் போக்கு ஏற்படும். மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியது அவசியம். தடைகளைத் தாண்டி வெற்றி காண வேண்டிய வாரம் இது.
வழிபாடு: விநாயகருக்கு சிதறுதேங்காய் உடைத்து காரியத்தைத் துவக்கவும்.
கன்னி – :எடுத்த காரியங்கள் முன்னேற்றம் தரும். நிலுவையில் உள்ள பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். இக்கட்டான சூழலில் உதவி வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு துணைநிற்பர். பேச்சில் கடுமை வெளிப்படும். ஏதேனும் ஒரு வழியில் பண வரவு வந்து சேரும். சேமிப்பு உயர்வடையும். உடன்பிறந்தோரிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிட்டும். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிச்சுமையை வெகுவாக குறைக்கும். வீட்டை சுத்தமாக வைத்திருப்பதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகளின் முதிர்ச்சியான பேச்சு உங்களை பிரமிப்பில் ஆழ்த்தும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உடல்நிலையில் அதிக கவனம் அவசியம். தம்பதியருக்குள் மனஸ்தாபம் தோன்றி மறையும். வேலைக்குச் செல்வோர் அலுவலக பணிகளை உடன் பணிபுரிவோர் துணையுடன் எளிதாக செய்து முடிப்பர். மாணவர்கள் மனப்பாடத் திறனை உயர்த்திக் கொள்ள வேண்டியது அவசியம். கலைத்துறையினருக்கு புதிய முயற்சிகள் கைகொடுக்கும். முன்னேற்றம் காணும் வாரம் இது.
வழிபாடு: சனியன்று விரதமிருந்து ஏழுமலையானை வழிபடவும்.
துலாம் -: மன உறுதியுடன் சோதனைகளை கடந்து எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி பெற போராடுவீர்கள். காரியங்கள் இழுபறி தரும். குடும்பத்தினர் குறித்த வருத்தம் இருக்கும். கடன் பிரச்னைகளால் சேமிப்பு குறையும். உடன்பிறந்தாரோடு கருத்து வேறுபாடு தோன்றும். மறதியால் சிரமத்திற்கு உள்ளாவீர்கள். உறவினர்களுக்கு உதவுவதில் திருப்தி கொள்வீர்கள். பிள்ளைகள் தங்கள் தேவைகளுக்கு உங்களைப் பெரிதும் சார்ந்திருப்பர். மருத்துவ செலவுகள் உண்டாகும் வாய்ப்புள்ளதால் உடல்நிலையில் கவனம் தேவை. சம்பந்தமில்லாத விவகாரங்களில் தலையிடுவதால் சங்கடங்களை சந்திக்க நேரிடும். தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். ஆன்மிகச் செலவுகள் அதிகரிக்கும். பணிபுரிவோர் அலுவலகத்தில் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் மனப்பாடத் திறனை வளர்த்துக் கொள்வது அவசியம். சோதனைகளைக் கடந்து வெற்றி காணும் வாரம் இது.
வழிபாடு: ரேணுகாபரமேஸ்வரியை வழிபட்டு வரவும்.
விருச்சிகம் -:ஆசைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பம் அமையும். நிலுவையில் இருக்கும் பணி ஒன்றை சரியான நபர்களின் துணையோடு செய்து முடிப்பீர்கள். செயல்திறன் கூடும். குடும்ப சலசலப்பை போக்க முயற்சிப்பீர்கள். திறமையான பேச்சால் காரிய சாதனை உண்டு. சேமிப்பு உயரும். சிக்கன நடவடிக்கைகள் வெற்றி தரும். உடன்பிறந்தாரோடு இருந்த மனஸ்தாபம் நீங்கும். செல்போன் முக்கியமான நேரத்தில் செயலிழந்து போய் சங்கடம் தரும். உறவினர்களை உபசரிப்பதில் சிரத்தை கொள்வீர்கள். பிள்ளைகளின் சாமர்த்தியமான செயல்பாடுகள் உங்கள் கவுரவத்தை உயர்த்தும். தங்கள் கருத்துக்களை தம்பதியருக்குள் பகிர்ந்து கொள்வது நல்லது. வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பப் பெரியவர்களுக்கு பணிவிடை செய்வீர்கள். வேலைக்குச் செல்வோர் திறமையால் மேலதிகாரியின் நம்பிக்கைக்கு பாத்திரமாவர். கலைத்துறையினரின் கற்பனைகள் செயல்வடிவம் பெறும். மாணவர்கள் எழுத்து வேகத்தை உயர்த்திக்கொள்வது அவசியம். நற்பலன்கள் தரும் வாரம் இது.
வழிபாடு: ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வணங்கவும்.
தனுசு – : வாழ்க்கை தரம் உயரும். சுகமான சூழலை சந்திப்பீர்கள். நினைத்த பொருள் ஒன்று கிட்டும். உங்களை தவறாக எண்ணியவர் நட்புறவு நாடி வருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தினரோடு திடீர் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். பேச்சில் உறுதி இருக்கும். சொன்ன வாக்கை காப்பாற்ற முற்படுவீர்கள். பண வரவு தொடர்ந்து சேமிப்பு உயரும். உறவினர் ஒருவரோடு இருந்த மனஸ்தாபம் நீங்கும். கைகால் தளர்ச்சி, அசதி, மயக்கத்தால் உடல்நிலையில் சிரமம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் கலகலப்பு கூடும். பிள்ளைகளின் செயல்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும். வீட்டை அலங்கரிப்பதில் நாட்டம் கூடும். தம்பதியராக இணைந்து வெளியூர் பிரயாணம் செல்ல நேரிடும். கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். வேலை பார்ப்போர் கவனக்குறைவால் செய்யும் தவறுகளால் சிரமத்திற்கு உள்ளாவர். மாணவர்கள் நண்பர்களோடு இணைந்து கூட்டுப் பயிற்சி மேற்கொள்வது நல்லது. கலைத்துறையினர் முயற்சியில் வெற்றி காண்பர். சுகம் தரும் வாரம் இது.
வழிபாடு: அதிகாலை சூரியனை வணங்கி வரவும்.
மகரம் -:செயற்கரிய சாதனைகள் படைப்பீர்கள். ஒதுக்கிய காரியங்களை மீண்டும் கையிலெடுத்து வெற்றி காண்பீர்கள். தன்னம்பிக்கை உங்கள் முயற்சிக்குத் துணை நிற்கும். குடும்பத்தில் லேசான சலசலப்பு தோன்றும். பணவரவில் ஏற்படும் தடைகள் பொருளாதார சிக்கல் தரும். அவப்பெயரை தவிர்க்க பேச்சில் கூடுதல் கவனம் தேவை. யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தன்னம்பிக்கையோடு காரியமாற்றுவீர்கள். அண்டை அயலாரின் துணையோடு பொதுப்பிரச்னைகளை தீர்த்து வைக்க முயற்சிப்பீர்கள். செல்போன், இன்டர்நெட் முதலானவை உங்கள் பணியை வெகு சுலபமாக்கும். நெருங்கிய உறவினர் ஒருவருக்கு உதவி செய்ய இயலாமல் மனம் வருந்துவீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக ஆர்வத்தோடு பாடுபடுவீர்கள். வேலைக்குச் செல்வோர் வாக்கு சாதுர்யத்தின் மூலம் அலுவலகத்தில் தங்கள் காரியங்களை எளிதாக சாதித்துக் கொள்வர். மாணவ, மாணவியர் எழுத்து வேகத்தினால் உயர்வடைவர். கலைத்துறையினர் பேச்சுத்திறமையினால் முன்னேற்றம் காண்பர். முயற்சியால் வெற்றி காணும் வாரம் இது.
வழிபாடு: ‘நமசிவாய’ எனும் பஞ்சாட்சர மந்திரத்தை தினமும் ஜபித்து வரவும்.
கும்பம் -: கனவுகள் நிறைவேறக் காண்பீர்கள். விரும்பிய பொருள் ஒன்றினை வாங்க சந்தர்ப்பம் சாதகமாக அமையும். சேமிப்பு உயர்வடையும். தங்கம், வெள்ளியில் முதலீடு செய்வது உத்தமம். குடும்பத்தில் கலகலப்பும், சலசலப்பும் கலந்திருக்கும். அதிகாரமான பேச்சால் சூழலை கட்டுப்பாடாக வைத்திருப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் வார்த்தைகள் அதிக முக்கியத்துவம் பெறும். முன்பின் அறிந்திராத விவகாரங்களில் கூட தைரியத்துடன் இறங்கி சாதிப்பீர்கள். வீட்டுக்கு தேவையான ஏ.சி., ஃபிரிட்ஜ், ஏர்கூலர் முதலான குளிர்சாதனப் பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளின் துறுதுறுப்பான பேச்சுகள் மகிழ்ச்சி தரும். கண், முகம், நெற்றி பகுதிகளில் அலர்ஜியால் பிரச்னைகள் தோன்றலாம். வாழ்க்கைத்துணையின் வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள். செலவுகள் வெகுவாக குறையும். பணிபுரிவோர் திறமையான பேச்சால் பதவி உயர்வு பெறுவர். மாணவர்கள் மனப்பாடத்திறன் மூலம் தேர்வினை எளிதாக எதிர்கொள்வர். கலைத்துறையினர் விமர்சனங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். லாபம் தரும் வாரம் இது.
வழிபாடு: பழனிஆண்டவனை வணங்கி வரவும்.
மீனம் -:எடுத்த செயல்களில் சிறப்பாக செயல்படுவீர்கள். எந்த சூழலிலும் உங்கள் கவுரவத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். சுறுசுறுப்பு கூடும். எந்த காரியத்திலும் இலக்கு நிர்ணயித்து ஓயாது பணியாற்றுவீர்கள். குடும்பத்தினர் தங்கள் தேவைகளுக்கு உங்களையே பெரிதும் சார்ந்திருப்பர். தடையில்லாத வரவால் சேமிப்பு உயரும். சொன்ன வாக்கினைக் காப்பாற்ற சில இழப்புகளை சந்திக்க நேரிடும். அண்டை, அயலாரோடு இணைந்து பொதுப் பிரச்னைகளைத் தீர்க்க முற்படுவீர்கள். பொழுதுபோக்கு அம்சங்களில் அதிக ஆர்வம் கொள்வீர்கள். உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் நடவடிக்கைகளை அதிக அக்கறையோடு கண்காணிப்பீர்கள். உஷ்ணத்தால் உடல்நிலையில் பிரச்னைகள் உருவாகக் கூடும். வாழ்க்கைத்துணையின் பணிகளுக்கு பக்கபலமாகத் துணை நிற்பீர்கள். பண விவகாரங்களை தனித்துக் கையாள்வதை தவிர்க்கவும். உத்யோகஸ்தர்கள் கவனக்குறைவால் மேலதிகாரியின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும். கலைத்துறையினர் புதிய திருப்பத்தை எதிர்பார்க்கலாம். மாணவர்கள் சுறுசுறுப்பால் நற்பெயர் வாங்குவர். தன்னம்பிக்கையால் உயர்வடையும் வாரம் இது.
வழிபாடு: லக்ஷ்மிநரசிம்மரை வணங்கி வாருங்கள்.