மின்சார சபையினால் இன்று அறிவிக்கப்பட்டிருந்த மூன்று மணித்தியால மின் வெட்டு இடைநீக்கப்பட்டுள்ளது.
அமைச்சின் அனுமதி கிடைக்காத காரணத்தால் குறித்த மின் வெட்டு தொடர்பான நேர அட்டவணையை நடைமுறைப்படுத்த முடியாது என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் பணிப்பாளர் சுலக்ஷண ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று முதல் எதிர்வரும் 31ம் திகதி வரை நாளொன்றுக்கு மூன்று மணித்தியாலத்திற்கு மின் வெட்டு நடைமுறைப்படுத்துவதற்கு மின்சார சபை தீர்மானித்துள்ளதாக சபையின் இணையத்தளம் மூலமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், பின்னர் குறித்த மின் வெட்டு தொடர்பான நேர அட்டவணை குறித்த இணையத்தளத்தில் இருந்து அகற்றப்பட்டிருந்தது.