கைது செய்யப்பட்டுள்ள சர்வதேச போதைப் பெருள் கடத்தல்காரர் என கருதப்படும் வசந்த மென்டிஸ் என்கிற மொரட்டுவ வசந்தவிற்கு எதிராக பணமோசடி சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக குற்றபுலனாய்வு திணைக்களம் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவற்துறை போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் உட்பட பல மோசடிகள் தொடர்பாக மொரட்டுவ வசந்த கடந்த 26 ஆம் திகதி தாய்லாந்தில் வைத்து சர்வதேச காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் பெங்கொக் நகரில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். 2013 ஆம் ஆண்டு இவரை கைது செய்ய காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்த போது இந்தியா ஊடாக சிங்கப்பூர் தப்பி சென்றுள்ளார்.
இதனால் சர்வதேச காவற்துறை ஊடாக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டு மொரட்டுவ வசந்த இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.