கார் ஓட்டப் பந்தய வீரர் டிலாந்த மாலகமுவ உட்பட மூன்று பேரிடம் கொழும்பு மேல் நீதின்றம் இன்று குற்றப்பத்திரிகைகளை வழங்கியது.
ஜப்பான் நாட்டவரின் வீடமைப்புத் திட்டம் எனக் கூறி, 6 லட்சம் அமெரிக்க டொலர்களை மோசடி செய்தமை உட்பட 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகைகளை சந்தேக நபர்களிடம் கையளித்த பின்னர், நீதிபதி ஏ.ஏ.ஆர். ஹெய்யன்துடுவ வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜூன் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.