அம்பலங்கொடை மீன்பிடி துறைமுகத்தில் இன்று மதியம் இடம் பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படகு உரிமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உந்துருளியில் வந்த இருவர் டி 56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி குறித்த துப்பாக்கி பிரயோகத்ததை மேற்கொண்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் அம்பலங்கொடை – ஹிரியவத்த பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவராவார். சந்தேக நபர்கள் தப்பிச்சென்றுள்ள நிலையில் , அவர்களை கைது செய்வதற்காக அம்பலங்கொடை காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.