கடமைகளுக்கு தடை ஏற்படுத்தி காவற்துறை உத்தியோகஸ்தர்களை தாக்கி பின்னர் உப காவற்துறை பரிசோதகரின் அந்தரங்க உறுப்பை கடித்த நபரொருவர் கொஸ்கொட காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் காயங்களுக்கு உள்ளான கொஸ்கொட காவற்துறை நிலையத்தின் உப காவற்துறை பரிசோதகர் பலபிட்டிய போதனா மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் இரவு கொஸ்கொட துவமோதர – காலி புகையிரத குறுக்கு பாதையில் சிலர் மது பானம் அருந்தி கொண்டிருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவற்துறை உப பரிசோதகர் அந்த இடத்தில் இருந்து செல்லுமாறு அவர்களுக்கு தெரிவித்துள்ளார்.இதன் போது குடி போதையில் இருந்த நபரொருவர் குறித்த காவற்துறை பரிசோதகரின் அந்தரங்க உறுப்பை கடித்துள்ளார்.
தற்போது பலபிட்டிய போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உப காவற்துறை பரிசோதகருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.