அம்பாறை ராகம்வெல கடற்கரையில் வெளிநாட்டு பெண் ஒருவரை பலவந்தமாக கொண்டு சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த விமானப்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (26) மாலை இத்தாலி நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கடற்கரையில் இருந்த போது குறித்த சந்தேக நபர் கடற்கரை அருகில் இருந்த புதர் கட்டுக்கு அவரை கொண்டு சென்றுள்ளார். எனினும் குறித்த பெண் சந்தேக நபரிடமிருந்து தப்பி சென்றுள்ளார். பின்னர் அவர் காவற்துறையில் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த சந்தேக நபர், ராகம்வெல விமானப்படை தளத்தில் சேவையில் ஈடுபடுபவர் என காவற்துறை ஊடகப் பிரிவு உறுதி செய்துள்ளது. 30 வயதான குறித்த சந்தேக நபர், இன்று (28) பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.