தாங்கள் மேற்கொள்ளும் சிதறுதேங்காய் உடைக்கும் போராட்டத்துக்கான பலன்கள் தற்போது கிடைத்து வருவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இதனை இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் சூரியபகவான் கோபமடைந்துள்ளார், அதன் காரணமாகவே தற்போது நாட்டில் மழை பெய்வதில்லை. மழைபெய்வதற்காக வேண்டுதல் நடத்த சிறிமாபோதியவிற்கு செல்கின்றனர்.
இதன் படி, தங்களின் போராட்டத்தின் பலனாக, ஏப்ரல் மாதத்தின் பின்னர் நாட்டில் ஆட்சி கவிழும் செய்தி கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.