தமிழ் ஊடகவியலாளர்களின் கொலைகள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சீ. வீ விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
40க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் நான்கு பேரளவிலேயே சிங்களவர்கள். அவர்கள் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும், தமிழ் ஊடகவியலாளர்கள் குறித்த விசாரணைகள் இடம்பெறுவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.