ஹேரோயின் 3 கிலோ கிராமுடன் 7 சந்தேக நபர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு மேற்கொண்ட சோதனையில் குறித்த சந்தேக நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நாட்டிற்கு போதைப் பொருளை கொண்டு வந்தவர்கள் 4 மாலைத்தீவு நாட்டவர் ஆகும். இதனை பெற்று கொள்வதற்காக கட்டுநாயக்க விமான நிலைய வெளிப்புற பகுதியில் இருந்த இலங்கை நாட்டை சேர்ந்த மேலும் 3 பேரையும் கொழும்பு போதைப் பொருள் தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது.
மாலைத்தீவில் இருந்து இந்த நாட்டிற்கு போதை பொருளை கொண்டு வந்து விநியோகிக்கும் நோக்கில் மாலைத்தீவு நாட்டவர் இலங்கைக்கு வந்திருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.