பாகிஸ்தான் லாகூரில் தென்மேற்கு பகுதியில் உள்ள குல்சான் – இ—இக்பால் பார்க் என்ற பகுதியில் குண்டு வெடித்ததில் 56க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் உள்ள குல்சான் இ இக்பால் பூங்கா அருகே இன்று குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
இந்த குண்டுவெடிப்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 56 பேர் இறந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.
ஈஸ்டர் பண்டிகை என்பதால் கிறிஸ்துவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் ஏராளமான பொலிசார் குவிந்துள்ளனர். மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த குண்டு வெடிப்பு குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.