சுவிஸின் SBB நிறுவனம் அகதிகளுக்கு வேலை வழங்கும் திட்டத்தினை அமைத்து அவர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு மத்திய ரயில்வே நிறுவனம், பெர்ன் நகரில் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணியில், புகலிடக்கோரிக்கையாளர்களை அமர்த்தியது.
இதில், புகலிடக்கோரிக்கையாளர்கள் நல்ல அனுபவத்தை கற்றுக்கொண்டதால், SBB நிறுவனம், சுத்தம் செய்யும் பணிகள் மட்டுமின்றி இதர வேலைகளுக்கும் அகதிகள் விண்ணப்பிக்கலாம் எனக்கூறி பணி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Olten மற்றும் Biel நகரங்களையும் தாண்டி, மேலும் 4 இடங்களை பணிக்காக அதிகரித்துள்ளது.
Team Clean என்ற இந்த திட்டத்தின் மூலம் அகதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது, மேலும் இதில் பணியாற்றுவதன் மூலம், இவர்கள் தொழிலாளர் சந்தையிலும் நுழைவதற்கான அனுபவத்தை கற்றுக்கொள்ளலாம் எனக்கூறியுள்ளது.